ஃபெங்கல் புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை கடந்ததை அடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் விமான சேவை தொடங்கியது.
பலத்த காற்று மற்றும் சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக விமான நிறுவனங்கள் ஆலோசனை செய்து தங்களது விமான அட்டவணையை மாற்றி அமைத்தன. இதனால் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பலர் 8 முதல் 10 மணி நேரம் வரை விமான நிலையத்தில் சிக்கித் தவித்தனர்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் நிலைகொண்டிருந்த ஃபெங்கல் புயலால், 65-75 கிமீ / மணி வேகத்தில் காற்றின் வேகம், மணிக்கு 85 கிமீ / மணி வரை சூறாவளி புயல் வீசும் எனத் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து புயல் படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு-தென்மேற்கு நோக்கி நகரும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஃபெங்கல் புயல் நேற்றிரவு 10:30 மணிக்குள் கரையைக் கடந்தது. இதனால் கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு வழிவகுத்தது. சாலை மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
ஃபெங்கல் புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி அருகே கடற்கரையை கடந்ததை அடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை முதல் விமான சேவை தொடங்கியது.