காஞ்சிபுரம் கேபிள் டிவி பழுது பார்க்க வந்த உரிமையாளர் முருகன் உயர் மின் அழுத்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.. காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
காஞ்சிபுரம் மாவட்டம் மூலம் நேற்று முதலே ஃபெஞ்சல் புயல் காரணமாக அதி கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மிலிட்டரி சாலை அடுத்த தியாகி விஸ்வநாதன் நகர் பகுதியில் நேற்று இரவு மின்னழுத்தம் மாறுபாடு காரணமாக கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்கள் அனைத்தும் வெடித்தது. இதுகுறித்து அப்பகுதி கேபிள் பழுது நீக்கும் பணியாளர் முருகன் என்பவருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் அப்பகுதிக்கு சென்று பகுதி நீக்கும் பணியை முருகன் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஓயரை மாற்ற திட்டமிட்ட நிலை அது உயர் மின் அழுத்த கம்பியில் உரசிய நிலை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சரிந்துள்ளார்.
உடனடியாக அவரைப் அப்பகுதியில் இருந்த சிலர் முதல் உதவி செய்து மீட்க முயன்றும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு இறந்த முருகனின் உடலை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த முருகனுக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.