Close
டிசம்பர் 5, 2024 2:26 காலை

காஞ்சியில் மழை குறைந்தது..! நிவாரண முகாமில் மருத்துவ முகாம்..!

நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்கள்.

பெங்கல் புயல் காரணமாக கன மழை பெய்து வந்த நிலையில் அதிகாலை முதல் மழைப்பொழிவு குறைந்துள்ளது. நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 701 நபர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

மழை பொழிவு இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

தமிழகத்தில் பெங்கல் புயல் காரணமாக நேற்று முதல் காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை கன மழை பெய்தது.

வகையில் காஞ்சிபுரத்தில் 153 மில்லி மீட்டரும் உத்திரமேரூர் அதிகபட்சமாக 2500 மில்லி மீட்டர் வாலாஜாபாத்தில் 127mm ஸ்ரீபெரும்புதூரில் 130 மில்லி மீட்டர் குன்றத்தூரில் 107 மில்லி மீட்டர் செம்பரம்பாக்கத்தில் 132 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து 5610 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 4217 கன அடி நீர் வரவாக குறைந்துள்ளது.

மேலும் ஏரி மற்றும் ஆற்றுக்கரை ஓரங்களில் உள்ள பழங்குடியின மக்களை பாதுகாக்கும் வகையில் ஐந்து தாலுகாக்களில் இருந்து 701 பேர் வரவழைக்கப்பட்டு 27 தங்கும் முகாம்ங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தங்க வைக்கப்பட்டுள்ள அனைத்து முகாம்களிலும் இன்று சிறப்பு மருத்துவ முகாம்களும், இது மட்டும் இல்லாமல் பல்வேறு பகுதிகளில் சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம்ங்கள் நடைபெற்று வருகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top