Close
டிசம்பர் 4, 2024 7:31 மணி

காஞ்சிபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்..!

தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறையினர்

காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் காஞ்சிபுரம் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்கல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் நேற்று அதிகன மழை பெய்தது.

கடந்த 24 மணி நேரத்தில் உத்திரமேரூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை முதலே அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் சாலையில் தேங்கியுள்ள நீரை அகற்ற காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் பணியாளர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்துடன் ரங்கசாமி குளம் இரட்டை மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை சாலையோர மழை நீர் வடிகால்களை சூழ்ந்துள்ள கழிவுகளை அகற்றி நீரை சாலையிலிருந்து வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட சாலை பள்ளங்களை தற்காலிக சாலை அமைத்து பொதுமக்கள் போக்குவரத்திற்கு சரி செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் மழை நீர் வடிகால் கால்வாய்களில் கட்டிட கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்டவைகளை போடுவதாலே மழைநீர் வடிகால் கால்வாய்களில் நீர் செல்லாமல் சாலையில் கேட்கும் நிலை ஏற்படுவதாகும் பொதுமக்கள் இதில் கவனம் கொண்டாலே அனைத்தும் சீராகும் என தெரிவிக்கின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top