Close
மே 21, 2025 10:59 காலை

வத்தலகுண்டு அருகே பெண் யானையின் கோரைப்பல் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது..!

கைது செய்யப்பட்டவர்களுடன் வனத்துறை அதிகாரிகள்

திண்டுக்கல் :

திண்டுக்கல், வத்தலக்குண்டுவில் இருந்து மதுரை செல்லும் சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பெண் யானையின் கோரைப்பற்களை விற்க முயற்சிப்பதாக மதுரை வன குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் வத்தலக்குண்டு வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பெண் யானையின் கோரை பற்களை விற்பனைக்காக வைத்திருந்த வால்பாறையை சேர்ந்த சசிகுமார்(36), கொடைக்கானலை சேர்ந்த ஜெயராமன்(74). வீரக்கல்லை சேர்ந்த செல்லத்துரை(49) .ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 பெண் யானையின் கோரப்பற்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top