Close
டிசம்பர் 4, 2024 7:23 மணி

மதுரை காவல் ஆய்வாளர் நாராயணசாமிக்கு பணி நிறைவு பாராட்டு விழா..!

மதுரையில் நடந்த பணி ஓய்வு விழாவில் ஆய்வாளர் நாராயணசாமிக்கு மரியாதை செய்யப்பட்டது.

மதுரை :

மதுரை மாவட்டம், ஒத்தக்கடையைச் சேர்ந்த சிறப்பு காவல் ஆய்வாளர் நாராயணசாமி, தமிழ்நாடு காவல் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி, காவல் துறை கண்காணிப்பாளரால் நூற்றுக்கும் மேற்பட்ட வெகுமதிகளை பெற்றிருக்கிறார்.

இவர் பணியாற்றி, நவ.30 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். போக்குவரத்து சிறப்பு காவல் ஆய்வாளர் நாராயணசாமிக்கு பணி நிறைவு பாராட்டு விழா பாண்டிகோவில் அருகே உள்ள தனியார் மஹாலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இவ்விழாவில், காவல்துறையினர், அரசு பணியாளர்கள், தொழிற் சங்க நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் நாராயணசாமிக்கு, பொன்னாடை அணிவித்து, புத்தகங்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

அனைவருக்கும் காவல் ஆய்வாளர் நாராயணசாமி நன்றி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top