Close
டிசம்பர் 5, 2024 2:39 காலை

கனிம வளத்துறை அனுமதி சீட்டுக்களில் மெகா முறைகேடுகள் : கணினி ரசீது வழங்க கோரிக்கை..!

கனிம வளத்துறையில் கொடுக்கும் அனுமதி சீட்டுகளில் முறைகேடு நாதப்பதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கனிம வளத் துறையில் வழங்கப்படும் அனுமதி சீட்டுக்களில் நடக்கும் மெகா முறைகேடுகளை தடுத்து நிறுத்த கணினி ரசீது வழங்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ்நாடு கனிமவளத்துறை சார்பில் கல்குவாரிகள் மற்றும் கல் அரவை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து லாரிகள் மூலம் எடுத்து வரப்படும் பொருட்களுக்கு கனிம வளத்துறையின் அனுமதி சீட்டுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையிலான குழுவினர் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி சந்தித்து முறைகேடுகளை தவிர்க்க கணினி ரசீது வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து மாநில தலைவர் யுவராஜ் கூறுகையில் , பல்வேறு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு இத்தொழில் நடைபெற்று வரும் நிலையில் கனிமயமாக்குதல் என்பது கடந்த 20 ஆண்டுகளாக அரசு அலுவலகங்கள் மாறிவரும் நிலையில் கனிமவளத்துறை மட்டும் கைகளில் எழுதி ரசீது அளித்து வருவது பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுப்பதாகவும், இதனைத் தவிர்க்க பர்மிட் பாஸ் அனைத்தும் கணினிமான அனுமதியாக இருந்தால் அதில் முறைகேடுகளை தவிர்க்க பெரிதும் உதவும் என்பதால் உடனடியாக அதனை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமுல்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

கைகளால் எழுதப்படும் அனைத்து எழுத்துக்களையும் அழிக்கும் வகையில் பொருட்கள் உள்ளதால் அச்செயலை தொடர வேண்டாம் என சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

இதனை செயல்படுத்தாவிடில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top