Close
டிசம்பர் 4, 2024 7:11 மணி

இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது..!

இளையனார்வேலூர்அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

இளையனார்வேலூர்அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த இளையனார் வேலூர் பகுதியில் அமைந்துள்ள மிக ஒரு பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமானது அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

அருணகிரிநாதர் முருகனை தரிசித்து இரண்டு திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகவும் கிருபானந்த வாரியார் சாமிகளால் முன்னின்று குடமுழுக்கு நடத்திய திருத்தலமாகும் விளங்கி வருகிறது.

இந்நிலையில் இத்திருக்கோவில் ராஜகோபுரம் மூலவர் சன்னதி மூலவர் கோபுரம் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் உள்ளிட்ட அனைத்திற்கும் வருகிற ஐந்தாம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இதற்காக மூலவர் மற்றும் உற்சவருக்கான சிறப்பு யாகசாலையும், விநாயகர் அம்மன் வேல் உள்ளிட்ட பரிவார மூர்த்தி களுக்கு என மொத்தம் 31 யாகசாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நாளை மாலை முதல் துவங்க உள்ளது.

நேற்று காலை 8 மணிக்கு ஆலய அர்ச்சகர் வேதகிரி குருக்கள் தலைமையிலான குழுவினர் கணபதி ஹோமத்துடன் துவங்கிய நிகழ்வு கோ பூஜை தனபூஜை , லட்சுமி ஓமம், அங்குராப்பனம் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு அறுகால பூஜைகளுடன் வரும் ஐந்தாம் தேதி காலை 7:30 மணி முதல் 9 மணிக்குள் ராஜகோபுரம் மூலவர் உற்சவர் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளை செயல் அலுவலர் கதிரவன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் கோதண்டராமன் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top