Close
டிசம்பர் 5, 2024 2:50 காலை

உத்திரமேரூர் அருகே செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

பெஞ்சல் புயல் காரணமாக காஞ்சிபுரம் அடுத்த மாகரல் செய்யாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.

உத்திரமேரூர் அருகே செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனுமந்தண்டலம், மாநகரில் அணைக்கட்டு நிரம்பி வினாடிக்கு 23 ஆயிரம் கன கடி நீர் வெளியேறி இருபுறங்களிலும் கரை புரண்டோடும் வெள்ளம்.

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அணுமந்தண்டலம் மற்றும் மாகரல் அணைக்கட்டு பகுதியில் நீர்வரத்து அதிகரித்து வினாடி 23 ஆயிரம் கன அடி நீர் வந்து வெளியேறி வருகிறது.

எனவே, பெருநகர், மாகரல் காவல்துறையினர் பொதுமக்கள் நலன் கருதி அனுமந்தண்டலம் அணைக்கட்டு மற்றும் பெருநகர் மேம்பாலம் , மாகரல் அருகே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top