ராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜா ஆசிரியர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவரது மகனிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்து அனுப்பியதால், வாலாஜா காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்து அவனின் தந்தை செந்தில்குமார் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்நிலையில், வாலாஜா நீதிமன்றத்தில் இவரது மகன் பெயரைக்கூறி வழக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனால் கோபப்பட்ட செந்தில்குமார் நீதிமன்ற வளாகத்திலுள்ள மரத்தில் ஏறி கீழே குதிப்பதாக மிரட்டல் விடுத்தார். அங்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் சுமார் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செந்தில்குமாரை மரத்திலிருந்து கீழே இறக்கினர்.
பின்னர் வாலாஜா காவல்துறையினர் அவரை விசாரணைக்காக வாலாஜா காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
மரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.