Close
டிசம்பர் 5, 2024 2:17 காலை

36 ஆண்டுக்கு முன்பே இந்தியாவை கணித்த யோகி

1989லேயே இந்தியாவின் வளர்ச்சியை யோகிராம்சுரத்குமார் கணித்துள்ளார் என்ற சுவராஷ்யமான ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது.

இன்று இந்தியா உலகில் மிகபெரிய நாடாக மின்னலாம். ரஷ்யாவும், அமெரிக்காவும் தேடிவரும் நாடாக இந்தியா மாறியிருக்கலாம். உலகின் வல்லமையான தேசமாக இருக்கலாம். உலகின் பலமான தேசமாக இன்று மிளிரலாம். அதுவும் 2104க்கு பின்பு உலகின் முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்திருக்கலாம்.

ஆனால் மோடி வருவதற்கு முன்பு அப்படி அல்ல. ஒரு பலவீனமான தேசமாகவே இந்தியா அமிழ்த்தப்பட்டிருந்தது. அதற்கு முதல் காரணம் சோவியத் யூனியன். இந்தியாவின் பெரும் நிலமும், வளமும், மகா முக்கியமாக மக்கள் தொகையும் சோவியத் யூனியன் இந்தியாவை பார்த்த அஞ்ச முக்கிய காரணமாக இருந்தது.

இன்று இந்தியா எழுந்து நிற்க பல காரணம் உண்டென்றாலும், மகா முக்கிய காரணம் சோவியத்தை இந்தியா மீறி வந்தது தான். ஆம், 1917க்கு முன்பே இந்திய சுதந்திரம் சாத்தியமாயிருந்தால் இத்தேசம் பிரிந்திருக்காது. இரண்டு மூன்று துண்டாக சிதறியிருக்காது. காஷ்மீரும் இப்படி சிதைந்திருக்காது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் எக்காலமும் போர் இல்லை எனும் பாரம்பரிய வரலாறும் தொடர்ந்திருக்கும்.

அமெரிக்க எழுச்சி ஒரு பக்கம் உலகை குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியத்தை பாதித்தது என்றால் சோவியத்தின் எழுச்சி கடுமையாக இந்தியாவினை பாதித்தது. சோவியத்தை அதன் காலடியில் எதிர்க்க ஒரு தளம் வேண்டும் என்ற கோணத்தில் சுமார் 70 நாட்களில் இந்தியாவினை கீறி உருவாக்கப்பட்ட தேசம் பாகிஸ்தான். அதை தொடர்ந்து இந்திய தேசம் சந்தித்த சிக்கல் ஏராளம்.

இந்த சிக்கல் மதரீதியாக, கொள்கை ரீதியாக, பாதுகாப்பு ரீதியாக பல சிக்கலை கொடுத்தாலும் அதை தாண்டி பொருளாதாரம் சர்வதேசம் என பல சிக்கலை கொடுத்தது. எதற்காக பாகிஸ்தான் உருவாக்கபட்டதோ அதற்குள் அமெரிக்காவும் பிரிட்டனும் புகுந்து குழப்ப இந்தியாவினை தன் கட்டுபாட்டில் கொண்டு வந்தது சோவியத் யூனியன்.

அது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் விரோதம் வந்த நாட்களில் சீன சார்பைத்தான் எடுத்தது, இந்தியாவினை அது வளரவிடவுமிலை சுயாதீனமாக இயங்க விடவுமில்லை. இந்தியாவில் தனது அரசியல் ஆதரவாளர்கள், இன்னும் பல புரட்சி அமைப்பு வரவும் அவைகள் இந்து உணர்வை குழப்பி வைத்ததிலும் சோவியத் முக்கிய பங்கு வகித்தது. இப்படி இந்தியாவின் கைகளை கட்டிய சோவியத் போரில் இந்தியா வெல்லும் பொழுதெல்லாம் கடுமை காட்ட தவறவில்லை. இந்திய பிரதமராக இருந்த சாஸ்திரியின் மரணம், வங்கபோருக்கு பின்னும் இந்தியா காஷ்மீரை கைபற்ற தடை என அது இந்திய வளர்ச்சியில் கடுமை காட்டியது.

இந்தியா இந்துநாடாக ஆக கூடாது என்பதிலும் அது குழப்பமான தேசமாக தன் அடிமையாக இருக்க வேண்டும் அந்த மதசார்பற்ற இந்தியா பிரிதொருநாளில் கம்யூனிச பூமியாக தன் கையில் இருக்க வேண்டும் என்பது தான் அதன் விருப்பம். இதனால் இந்தியாவிற்குள் நடந்த பெரும் குழப்பத்தில் அதற்கும் பங்கு இருந்தது.

1970களில் சோவியத் உடையும் என்றோ, இதே ரஷ்யாவும் உக்ரைனும் மோதும் என்றோ யாரும் கனவு கூட காணவில்லை. இந்திய தேசம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சோவியத் கேஜிபி எனும் உளவு அமைப்பின் சோதனை கூடமாகவே இருந்தது. இந்தியாவில் கம்யூனிசம், தொழிற்சங்கம், மானுடம், சமதர்மம் என எல்லா குழப்பத்தையும் செய்தார்கள்.

தேசம் குழம்ப என்னென்ன உண்டோ எல்லாம் ரகசியமாக செய்து வைத்தார்கள், பல்கலைக்கழகம், தொழிற்சாலை என எங்கும் ஊடுருவி மதசார்பற்ற, சமூகநீதி, புரட்சி, என எல்லா குழப்பங்களையும் விதைத்தார்கள். இதன் பின்னால் இந்து மத ஒழிப்பும் இந்தியாவினை துண்டாடும் திட்டங்கள் இருந்தன‌. அப்படிபட்ட சோவியத் 1989ல் உடைய முக்கிய காரணம் மிகையில் கார்ப்பசேவ். அவர் மட்டும் புட்டீன் போல வடகொரிய அதிபரை போல இருந்திருந்தால் சோவியத் உடைந்திருக்காது. சோவியத் கலைப்பே உலகில் மாற்றத்தை கொடுத்தது.

அதன் பின்பே இந்தியாவில் பாஜகவால் எழ முடிந்தது. அத்வானி, வாஜ்பாய், மோடி என அடுத்தடுத்த தலைவர்கள் அதன் பின்பே உருவானார்கள், சோவியத் இருந்தால் இதெல்லாம் சாத்தியமே இல்லை. சோவியத் சரிந்த பின்பே காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் சரிந்தனர்.

இன்று காணும் பலமான இந்தியா உருவாக சோவியத் கலைப்பு காரணம். அதை செய்தவர் அந்த கோர்ப்பசேவ். சோவியத் கலைப்பு என செய்தி வந்து இந்திய கட்சிகள் அரண்டு இனி என்னாகும் என பெரும் ஆரவாரமும் பதற்றமும் ஏற்பட்ட நேரம், உலகம் இனி என்னாகும் என்ற பெரும் கேள்வி எழுந்த நேரம் திருவண்ணாமலையில் ஒரு சாது மெல்ல சிரித்தார்.

பின் திடீரென அழுதார். இந்துஸ்தானில் யாரும் சொல்லாத அல்லது சொல்ல தயங்கிய வார்த்தையினை திருவண்ணாமலை தெருவோரம் ஒரு பிச்சைக்கார கோலத்தில் இருந்து சொன்னார். “என் மக்களே, உங்களில் யாராவது ஒருவரால் முடியுமானால் அந்த கோர்ப்பசேவுக்கு இந்த பிச்சைக்காரனின் நன்றியினை தெரிவியுங்கள். உலகுக்கு மிகப்பெரிய நன்மையினை அவர் செய்திருக்கின்றார். அதைவிட நமக்கு பெரும் உதவி செய்திருக்கின்றார். இந்த பிச்சைக்காரன் அவரை மனமார வாழ்த்துகின்றான். இந்த பிச்சைக்காரனின் நன்றியினை அவருக்கு தெரிவித்து விடுங்கள்”.

அன்று அந்த பிச்சைக்கார சன்னியாசி சொன்னது யாருக்கும் கேட்கவில்லை. ஆனால் இன்று மோடியின் எழுச்சியில் இந்தியா பலமாகி ரஷ்யாவுக்கு இந்தியா அதிமுக்கிய தேவை என்ற நிலை உருவாகி விட்டது. இந்தியா இல்லாவிட்டால் ரஷ்யாவின் எண்ணைக்கு சந்தையில்லை. ரஷ்யாவை ஆதரிக்க நாடு இல்லை என நிலைமை மாறி விட்ட பின் இந்திய கை ஓங்கி விட பின் பலமாக கேட்கின்றது.

இந்தியா உலகில் மகா முக்கிய இடம் வகிக்கும் போது கேட்கின்றது, இந்தியா யாரையும் நம்பி இல்லை என உலகம் சொல்லும் போது கேட்கின்றது. சீன போரின் போது இந்தியாவினை கைவிட்ட ரஷ்யா, 1965ல் இந்திய பாகிஸ்தான் போருக்கு நடுநிலை என சாஸ்திரியின் மர்ம மரணத்தோடு தன் நரிர்தனத்தை காட்டிய ரஷ்யா, 1971ல் காஷ்மீர் இந்தியாவுக்கு செல்லகூடாது என தடுத்த ரஷ்யா இன்று காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கபட்ட பலமான இந்தியா முன் கைகட்டி நிற்கின்றது. இன்று ரஷ்ய தலைவிதியே இந்தியாவின் கைகளில் இருக்கின்றது.

1989ல் கோர்ப்பசேவினை நோக்கி யாருக்கும் கேட்கா வகையில் “இந்த பிச்சைக்காரனின் நன்றியினை அந்த கோர்ப்பசேவுக்கு தெரிவியுங்கள், இந்த பிச்சைக்காரன் அவர் கைகளை பிடித்து நன்றி சொல்ல துடிக்கின்றான்” என அந்த சாமியார் சொல்லியிருக்கலாம். ஆனால் இன்று அவரின் வார்த்தை மிக சரியாக நினைவு கூறப்படுகின்றது. ஒரு இந்துசாமியார் எந்த அளவு இந்த தேசத்தை கவனித்திருக்கின்றார். தாடி வளர்த்த பிச்சைகாரனாக அழுக்கான உடையுடன் (நா)யுடனும் பிளாட்பாரத்திலும் பிச்சை எடுத்தவர் எப்படி உள்நாட்டு வெளிநாட்டு அரசியலை கவனித்திருக்கின்றார் என்றால் அதுதான் யோகம் முழு யோகம், பிரபஞ்சத்தில் கலந்த பெருநிலை.

அதைதாண்டி இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் எது மிக அவசியமானது எனும் அந்த தேசபற்று, கண்ணீர் வரவைக்கும் அந்த தேசபக்தி. ரஷ்ய உக்ரைன் போரில் இந்தியாவின் பெருநிலை வலுவாக நிற்கும் பொழுதெல்லாம் அந்த சாதுவும் நினைவுக்கு வருகின்றார். அவர் “யோகிராம் சுரத்குமார்” எனும் யோகி. மகா யோகி. இந்த தேசத்தையும் இந்துமதத்தினையும் மனமாரா நேசித்து அதற்காவே பிச்சைக்காரனாக வாழ்ந்த மகா யோகி. நாமும் அந்த யோகியின் வார்த்தைகளை சொல்கின்றோம்.

பிரதமர் மோடியும் இன்னபிற பிம்பங்களும் பல ஆசிரமங்களுக்கு செல்லட்டும் அது நல்லது. அப்படியே தேசத்தை முழுக்க நேசித்து, 1989களிலே இனி தேசம் வாழும் என்பதை உணர்ந்து அழுக்கு பிச்சைக்கார கோலத்திலும் திருவண்ணாமலை தெருவில் இருந்து மாஸ்கோவில் இருந்த கோர்ப்பசேவுக்கு இந்தியனாய் இந்துவாய் நன்றி சொல்லி உருகிய அந்த யோகிராம் சுரத்குமார் வாழ்ந்த இடத்துக்கும் ஒருமுறை செல்லட்டும், செல்லவேண்டும். அதுதான் இந்துவாக நின்ற அந்த சுத்தமான இந்து யோகிக்கு தேசம் காட்டும் மிகபெரிய அங்கீகாரம். அதுமட்டுமா காசிக்கு இணையாக இந்தியாவில் உள்ள இடம் திருவண்ணாமலை என அன்றே யோகிராம்சுரத்குமார் உலகிற்கு சொன்னதும் இப்போது நடக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top