Close
டிசம்பர் 5, 2024 1:59 காலை

சோழவந்தானில் கீழே கிடந்த மணிபர்சை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் : நேர்மைக்கு குவியும் பாராட்டுகள்..!

பர்ஸை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் காசிமாயன்

சோழவந்தான்:

சோழவந்தானில் ஆட்டோ ஓட்டுபவர் காசிமாயன். இவர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் சென்றபோது எதிரில் மணி பர்ஸ் ஒன்று கீழே கடந்துள்ளது. அந்த மணி பர்ஸை எடுத்த அவர் சோழவந்தான் காவல் நிலையத்
திற்குச் சென்று ஒப்படைத்தார்.

அங்கிருந்த காவலர்கள் ஆட்டோ டிரைவர் காசிமாயனின் நேர்மையை பாராட்டி அவரின் நேர்மையை கௌரவிக்கும் வகையில் சால்வை அணிவிக்க வந்தனர். மேலும் அவருக்கு பரிசு வழங்க முன் வந்தனர்.

ஆனால், பரிசினை ஏற்க மறுத்தார். இருப்பினம் இது உங்கள் நேர்மைக்கான பரிசு என்று வற்புறுத்திய போலீசார் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். கீழே கிடந்த பர்ஸை ஒப்படைப்பது எனது கடமை இன்றி ஆட்டோ ஓட்டுனர் காசி மாயன் கூறிவிட்டு வந்தார்.

கீழே கிடந்த மணி பர்சை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் காசிமாயனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top