Close
டிசம்பர் 5, 2024 2:08 காலை

கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் தாலி செயினை பறித்த 3 பேர் கைது..!

செயின் பறித்தவர்கள் கைது -மாதிரி படம்

கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் டயர் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7சவரன் தாலி சங்கிலி பறித்த 3பேர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அரும்பாக்கம் சாலையில் உள்ள டயர் கடையில் கடந்த 28ஆம் தேதி கோமதி (39) வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார்.

அப்போது 2பேர் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி, கம்மல், செல்போனையும் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் ஆட்டோவில் தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆரம்பாக்கம் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

சென்னையில் பதுங்கி இருந்த திருவேற்காடு சேர்ந்த ராஜ்குமார் (35), அமைந்தகரையை சேர்ந்த கணேஷ் (34), தாம்பரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி (24) ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top