முறையான பேருந்துகள் இல்லாததால் நெய்யாடுப்பாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளிக்கு கால தாமதமாக வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்..
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், நெய்யெடுப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது நெ.து. சுந்தர வடிவேல் அரசினர் மேல்நிலைப்பள்ளி.
நடுநிலைப் பள்ளியாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை 400 மேற்பட்ட மாணவ, மாணவிகள் நெய்யாடுப்பாக்கம், காவாந்தண்டலம், வயலாக்காவூர், புளிவாய், புத்தளி , இருமரம், சித்தாத்தூர் , இளையனார் வேலூர், வள்ளிமேடு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்கு வருகை புரிய காஞ்சிபுரத்திலிருந்து காலை 7:45க்கு தனியார் பேருந்தும், 8.30 மணிக்கு அரசு பேருந்து காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு இவ் வழியாக வயலக்காவூர் செல்கிறது.
இந்த அரசு பேருந்தில் மாணவர்கள் இலவச பயணத்தின் சென்று கல்வி கற்கும் நிலையில் அரசு பேருந்து முறையான நேரத்திற்கு வருவதில்லை என்பதும் வாரத்திற்கு மூன்று நாள் கால தாமதமாக வருவதால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் 10 மணிக்கு மேல் செல்லும் நிலை ஏற்படுகிறது.
அரசு பள்ளிக் கல்வித் துறையின் மூலம் பள்ளி மாணவர்கள் வருகை பதிவேடு 10 மணிக்குள் முடிக்கக் கூடிய நிலையில் அதனைத் தாண்டி பள்ளி மாணவர்கள் வருவதால் அதனை முறையாக செய்ய இயலவில்லை .
மேலும் முன்பாக வரும் தனியார் பேருந்தில் பள்ளி மாணவர்கள் பணம் செலுத்தி பயணம் செல்ல தயக்கம் காட்டுவதும், மேலும் கால தாமதமாக அரசு பேருந்து செல்லலாம் எனவும் பயணிப்பதால் ஒரு பாடவேளை முற்றிலும் குறைந்து விடுவதால் மாணவர்களின் கல்வித் திறன் வெகுவாக குறையும் என்பதால் இப்பகுதிக்கு முறையான நேரங்களில் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என பள்ளி மேலாண்மை குழு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தும் தற்போது வரை தீர்வு காணப்படவில்லை என்பதால் இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.