Close
டிசம்பர் 12, 2024 10:20 காலை

அம்பேத்கரின் 68வது நினைவு தினம் : கும்மிடிப்பூண்டி திமுக எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை..!

டாக்டர்.அம்பேத்கரின் 68வது நினைவு தினத்தையொட்டி திமுக எம்.எல்.ஏ., டி.ஜெ. கோவிந்தராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பெரியபாளையத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர்  நினைவு நாளை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பி. ஜெ.மூர்த்தி தலைமையில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், துணை ச் செயலாளர் கதிரவன், ஒன்றிய அவைத் தலைவர் ரவிச்சந்திரன், ஆதிதிராவிட மாவட்ட அமைப்பாளர் சம்பத், பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் பொன்னுசாமி,மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் பார்த்திபன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அப்புன்,ஐ.ராஜா ஆகியோர் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் சத்திய வேலு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top