கடலூர் அருகே உள்ள கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் குரு இவரின் மகன் கதிர் (வயது 17) ஐடிஐயில் படித்து வந்தார். இந்நிலையில் இவரும் இவருடன் பயிலும் நான்கு ஐடிஐ மாணவர்களும் நத்தப்பட்டு ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக கடலூர் சுற்றி பெய்த கனமழை காரணமாக குளம் நிரம்பி இருந்தது. மேலும் அக்குளத்தில் தாமரைக் கொடிகள் அதிக அளவில் இருந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக கதிர் நீரில் மூழ்கி குளத்தின் சேற்றுக்குள் சிக்கிக் கொண்டார். இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையிலிருந்து தீயணைப்பு படை வீரர்கள் பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் சுமார் 20 மணி நேரமாக குளத்தில் மூழ்கிய கதிரை தேடும்பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் நேற்று காலை குளத்தின் சேற்றுக்குள் சிக்கி இருந்த கதிரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்த கதிரின் உடலைப் பார்த்து பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பலர் கதறி அழுதனர்.
இறந்து போன கதிர் இளம் கபடி விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.