Close
ஏப்ரல் 7, 2025 2:12 காலை

வளர்பிறை பஞ்சமியையொட்டி வராகியம்மனுக்கு சிறப்பு பூஜை..!

வராகியம்மன்

மதுரை:

மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு  வராகி அம்மன் சன்னதியில், சிறப்பு ஹோமங்
களும் அதைத் தொடர்ந்து, வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றது.

பக்த கோடிகள், மக்கள் வழிபாட்டில் பங்கேற்று வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, மஞ்சள் மாலை, அரளிப்பூ மாலை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை, சௌபாக்கிய விநாயகர் ஆலய நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக மகளிர் குழுவினர் செய்திருந்தனர். இதே போல, மதுரை அண்ணா
நகர் யானை குழாய் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில், பஞ்சமி முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றது. அர்ச்சகர் மணி
கண்ட பட்டர், சிறப்பு பூஜைகளை செய்து பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை, முத்து மாரியம்மன் ஆலய, பரிபால சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top