Close
டிசம்பர் 12, 2024 12:43 மணி

மதுரையில் ஓவியம், சிற்பக்கலை கண்காட்சிக்கு விண்ணப்பிக்க கலைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு..!

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா

மதுரை.

மதுரை மண்டலத்தில் நடத்தப்பட்டவுள்ள ஓவிய சிற்பக்கலைக் கண்காட்சிக்கு ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை, நமது நாட்டின் பாரம்பரியக் கலைகளையும் பண்பாட்டினையும் கலைப் பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையில் கலைப் பயிற்சிகள் அளித்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி செயல்பட்டு வருகிறது.

மேலும், ஓவிய, சிற்பக் கலையினை வளர்த்திடும் நோக்கிலும், அக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை பண்பாட்டுத்துறையின் ஓவிய-சிற்பக் கலைக்காட்சியினை நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை பண்பாட்டுத்துறை சார்பாக, ஓவிய-சிற்பக் கலைக் கண்காட்சி மதுரை மண்டலத்தின் (மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மற்றும் இராமநாதபுரம்) மாவட்டங்களில் உள்ள ஓவிய சிற்பக்கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகளை கண்காட்சியாக வைத்து தெரிவு செய்வதற்கு ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு தெரிவு செய்யப்படும்.

ஓவிய சிற்பக் கண்காட்சியில் முதல் பரிசாக ரூ.5,000/- வீதம் 7 கலைஞர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.3,000/- வீதம் 7 கலைஞர்களுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- வீதம் 7 கலைஞர்களுக்கும் காசோலையாக வழங்கப்படவுள்ளது.

எனவே, மதுரை மண்டலத்தின் (மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மற்றும் இராமநாதபுரம்) மாவட்டங்களில் உள்ள ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் தங்களது ஓவியப் படைப்புகளை கண்காட்சியாக வைத்திட தன்விவரக் குறிப்பு மற்றும் படைப்புகள் எண்ணிக்கை, படைப்புகளின் புகைப்படங்கள் விவரங்களுடன்,

உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு- ரேஸ்கோர்ஸ், மதுரை-02 என்ற முகவரிக்கு 20.12.2024-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களுக்கு மண்டலக் கலை பண்பாட்டு மையம் தொலைபேசி எண் (0452-2566420 மற்றும் 98425 96563, 95000 08204)-க்கு தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top