Close
டிசம்பர் 12, 2024 2:33 மணி

திருவள்ளூர் அருகே 100 நாள் வேலை அளிக்கவில்லை என பெண்கள் சாலை மறியல்..!

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

திருவள்ளூர் அருகே 100 நாள் வேலை அளிக்கவில்லை, சரியான சாலை வசதி இல்லை, சரியான குடிநீர் வசதி இல்லை என்று கூறி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மீஞ்சூர் பொன்னேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை அளிக்கப்படவில்லை என்றும்,

அவர்கள் வசிக்கும் பகுதியில் சரியான சாலை வசதி இல்லை என்றும் நல்ல குடிநீர் கிடைப்பது இல்லை என்றும் கூறி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பொன்னேரி மீஞ்சூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல்கள் அறிந்து வந்த மீஞ்சூர் காவல் துறையினர் பொதுமக்களிடம் சமரசம் பேசிய பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் மீஞ்சூர் பொன்னேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top