Close
ஏப்ரல் 4, 2025 2:50 காலை

நாகூர் தர்காவுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பு மரங்கள் வெட்டிக் கடத்தல்

தமிழகத்தில் மிகப் பிரபலமான தர்காக்களில் ஒன்று நாகூர் தர்கா. இத்தர்காவுக்கு சொந்தமான தோட்டம் நாகூர் – நாகப்பட்டினம் மெயின் ரோட்டில் உள்ளது. சுமார் 4.5 ஏக்கர் அளவிலான இந்த தோட்டம் வருஷக் குத்தகைக்கு முகமது கௌஸ் என்பவருக்கு விடப்பட்டுள்ளது.

இந்த தோட்டத்தில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை குத்தகைதாரர் முகமது கௌஸ் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இங்குள்ள மரங்களை வெட்டவோ வேறு எந்த செயலும் செய்யவோ இந்த குத்தகையில் இடமில்லை.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சுமார் நூற்றுக்கணக்கான மரங்கள் சமூக விரோதிகளால் வெட்டப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டு கடத்தப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்புகைப்படம் எடுத்து இதனை நாகூர் தர்கா நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து நாகூர் தர்கா மேனேஜர் அன்பழகன் மற்றும் நிர்வாகத்தினர் உடனடியாக இடத்தினை பார்வையிட்டனர்.

வருடாந்திர குத்தகைக்கு எடுத்த நபர் மீதும், இதனை வெட்டி கடத்திய நபர்கள் யார் எனக் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகூர் காவல்துறைக்கு தர்கா நிர்வாகம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.  புகாரில் மாமரம், பலாமரம், புளிய மரம் உள்ளிட்ட பல பச்சை மரங்கள் அடியோடு வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிந்து நாகூர் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top