Close
டிசம்பர் 12, 2024 11:53 காலை

பெரியபாளையம் அருகே அரசு பஸ்சிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு..!

விபத்து- மாதிரி படம்

பெரியபாளையம் அருகே மாளந்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி முத்து என்பவரின் மனைவி கவிதா ( வயது 40). இவர் இன்று காலை பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மாளந்தூரில் இருந்து வெங்கல் சென்றார். பின் அங்கிருந்து ஆரணி செல்வதற்காக திருவள்ளூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறினார்.

விபத்தில் உயிரிழந்த கவிதா

அப்போது கவிதா பின்பக்க சீட்டில் அமர்ந்து இருந்தார் பஸ் சிறிது தூரம் சென்றதும் வடமதுரை பகுதியில் பின் சீட்டில் இருந்து முன் சீட்டில் அமர்வதற்காக எழுந்து சென்ற போது பஸ் திடீரென அங்கிருந்த சிறு பாலத்தில் ஏறி இறங்கியது. இதில் எதிர்பாராத விதமாக கவிதா படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

தகவலறிந்த பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் டிரைவர் ரமேஷ் மற்றும் நடத்துனர் முனுசாமி ஆகியோரிடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top