திருவண்ணாமலையில் பாமக சார்பில் நடைபெற உள்ள உழவர் பேரியக்க மாநில மாநாட்டிற்கான கலந்து கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட பாமக செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 21ஆம் தேதி திருவண்ணாமலையில் உழவர் பேரியக்க மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழக விவசாயிகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்த ஆலோசனைகள் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்கும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் குருவிமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய மாநகர மற்றும் பேரூர் நகர நிர்வாகிகள் விவசாய அணியினர் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் ஆலோசனைக் கூட்டம் வளாகத்தில் விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான கோரிக்கைகள் அதில் எழுதி மாநாட்டில் வழங்க உள்ளதாகும் கூறப்பட்ட நிலையில் அதில் நெல் குவின்டாலுக்கு ரூ500 உயர்த்த வேண்டும்,
விவசாயிகளுக்கு இடுபொருள் இலவசமாக வழங்கப்பட வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை விவசாய பயணிகளுக்கு பயன்படுத்த வேண்டும், பாலாற்றின் குறுக்கே 10 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒன்று என கட்ட வேண்டும், விவசாயிகளின் பொருள்களுக்கு விவசாயி விலை நிர்ணயிக்க வேண்டும், ஏரிகளை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவசாயக் கோரிக்கைகள் எழுதப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாமக விவசாய அணியினர் பல்வேறு ஆலோசனைகளை விளக்கி கூறி மாநாட்டில் திரளான தொண்டர்கள் விவசாயிகள் என பலர் கலந்துகொண்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலா அம்மாள், மாவட்ட தலைவர் உமாபதி, ஒன்றிய செயலாளர் ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.