Close
டிசம்பர் 12, 2024 8:07 மணி

லஞ்சம் இல்லாமலா..?! நடக்குமா நாட்டில்..?

லஞ்சம்- கோப்பு படம்

லஞ்சம் பற்றி சமூக வலைதளங்களில் வந்த பதிவு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இதனை நம் வாசகர்களுக்கு அப்படியே தருகிறோம்.

தினசரி நாளிதழிதல்களில் லஞ்சம் அலுவலர் கைது என்கிற தலைப்பில் செய்தி வெளிவந்துள்ளது. இங்கு நாம் ஒன்றை கட்டாயம் சிந்தித்து பார்க்க வேண்டும். லஞ்சம் பெற்று கைதாகும் அலுவலர் குடும்பத்தினர் மனநிலை எப்படி இருக்கும் என்று சிறிது சிந்தித்தோமேயானால் யாருக்கும் லஞ்சம் வாங்கும் எண்ணமே வராது.

இது ஏதோ ஒரு பகுதியில் ஏதோ ஒரு அரசு துறையில் நடைபெறுகிறது போன்று செய்தியாக வெளிவந்துள்ளது. இது பெரும்பாலான அரசு துறைகளில் அன்றாடம் நடைபெறக்கூடிய நிகழ்வுகள் தான். லஞ்சம் என்பது நம் நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு செயலாகவே மாறிவிட்டது .

இதற்கு உதாரணம் ஒன்றை இந்த நேரத்தில் கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் பல கோடியில் கட்டப்பட்ட பாலமானது ஒரு மழை வெள்ளத்துக்கே தாக்குப் பிடிக்காமல் கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே இடிந்து விட்டதாக ஊடகங்கள் அனைத்திலும்  செய்திகளாக வெளிவந்து அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கெட்டபெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மத்திய ,மாநில அரசுகளால் மக்கள் நலன் கருதி கொண்டு வரக்கூடிய மக்கள் நலத்திட்டங்கள் அனைத்திலும் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலைகளும் நடைபெறுவதில்லை .

கீழ்மட்ட அதிகாரிகள் வாங்கும் லஞ்சம் பணத்தை உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரம் படைத்த அரசியல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சதவீதம் என்று பிரித்து கொடுப்பது கீழ்மட்ட அதிகாரிகளின் கடமைகளில் தலையாய கடமையாகவே உள்ளது. இதில் பாதிக்கப்படுவது மட்டும் கீழ்மட்ட அதிகாரிகள் இது எந்த வழியில் நியாயம்.

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடும் அரசு ஊழியர்சங்கங்கள் கொஞ்சம் சிந்தித்து மக்கள் நல திட்டங்களில் நாங்களும் லஞ்சம் பெற மாட்டோம்; யாருக்கும் கமிஷன் கொடுக்க மாட்டோம் என்கிற உறுதி மொழியை எடுத்து ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைந்து செயல்பட்டாலே லஞ்சத்தை ஒழிக்க முடியும்.

ஊழல் , லஞ்சமில்லா நாட்டில் வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் அன்றாடம் கனவு கண்டு வாழ்ந்து கொண்டிருக்க கூடிய கோடான கோடி மக்களில் நானும் ஒருவன்.

நன்றி, வணக்கம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top