தென்காசியில் இணையதள நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் ரூபாய் மோசடி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியில் அலுவலகம் முன்பாக குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்துள்ள ரெங்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த சுதன் என்பவர்கள் இணையதள நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.
இந்த புகார் மனுவில் தாங்கள் இணையதள நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், இந்த நிறுவனத்தில் அலுவலகம் சென்று பணியாற்ற தேவையில்லை. அதற்கு மாறாக அரை மணி நேரம் மட்டும் கைபேசியில் இருந்து வேலை செய்தால் போதும் எனக் கூறியுள்ளனர்.
இவ்வாறு கூறியதோடு இதற்கு கல்வி தகுதி தேவையில்லை. பணம் முதலீடு செய்தால் போதுமானது. நீங்கள் முதலீடு செய்த தொகை 6 மாதத்தில் இரண்டு மடங்காக கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து குறைந்தபட்ச தொகையாக ஒரு லட்ச ரூபாயை நான்கு முறை தவணை முறையில் பல்வேறு நபர்கள் செலுத்தியுள்ளனர். 40க்கும் மேற்பட்ட நபர்கள் தொகையை செலுத்திய நிலையில் தொலைபேசி எண்ணை துண்டிப்பு செய்து ஏமாற்றி உள்ளனர்.
இது தொடர்பாக விசாரணையில் இவர்கள் மோசடி கும்பல் என தெரியவந்த நிலையில் காவல்துறையிடம் புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் சென்றுள்ளனர். காவல்துறையினர் புகார் மனுவை பெறாமல் அழக்களித்து வந்துள்ளனர்.
இது மோசடி தொகை அதிகமான தொகை என்பதால் பொருளாதார குற்றப்பிரிவில் சென்று வழங்குமாறு வற்புறுத்தி வருகின்றனர். நாங்கள் காவல்துறையிடம் அவ்வாறு வழங்கிய பட்சத்திலும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை.
மாறாக எங்களது புகார் மனுவை திரும்ப பெறுமாறு தங்களை வற்புறுத்தி வருகின்றனர். என கூறியதோடு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியில் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.