Close
டிசம்பர் 12, 2024 1:53 மணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை.. ரூ.78,000 வரை சம்பளம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய  பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய வெல்டர், பைப்பிங் ஃபேப்ரிகேட்டர், பைப்பிங் ஃபிட்டர், ஸ்ட்ரக்ச்சுரல் ஃபேப்ரிகேஷன், ஸ்ட்ரக்சர் ஃபிட்டர், மில்ரைட் ஃபிட்டர், கிரைண்டர்/கேஸ் கட்டர் மற்றும் பைப்பிங் ஃபோர்மேன் ( Welder (CS- GTAW +SMAW, SS-GTAW +SMAW, CS & SS- GTAW +SMAW, Alloy (P92 & p91 ) -GTAW+ SMAW, Duplex & Super Duplex- GTAW +SMAW), Piping Fabricator, Piping Fitter, Structure Fabricator, Structure Fitter, Millwright Fitter, Grinder (AG4 &AG7) /Gas cutter um Piping Foreman) தேவைப்படுகிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்ட Welder பணிக்கு ரூ. 40,000/-முதல் ரூ. 78,000/- வரை, Piping Fabricator ரூ. 40,000/- முதல் ரூ.51,000/- வரை Piping Fitter ரூ. 36,000/- முதல் ரூ. 42,000/- வரை Structure Fabricator ரூ. 42,000/- முதல் ரூ. 51,000/- வரை Structure Fitter ரூ. 36,000/- முதல் ரூ. 42,000/- வரை Millwright Fitter ரூ. 42,000/- முதல் ரூ. 51,000/- வரை Grinder/Gas cutter ரூ. 30,000/- முதல் ரூ. 32,000/- வரை மற்றும் Piping Fireman ரூ. 53,000/- முதல் ரூ. 60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

இந்தப் பணிகளுக்கு செல்வோர் விசா கிடைத்தப் பின்னர், இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.

விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ovemcInm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 25.12.2024 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தொலைபேசி எண் 044-22502267 மற்றும் Whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top