30 வருடங்களாக குடியிருக்கும் பகுதிகளுக்கு பட்டா வழங்க மாட்டீர்களா ? அதிகாரியை தொடர் கேள்வியால் வறுத்தெடுத்த கிராம மக்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் சித்தனக்காவூர் பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன மக்கள் சுமார் 50 பேர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் , தங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என கூறி மனு அளித்தனர்.
இதில் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் 30 வருடங்களாக வசித்து வருவதாகவும் , அரசு நடத்தும் பல்வேறு முகாம்களில் தொடர் மனுக்கள் அளித்து வருவதாகவும், வட்டாட்சியர் முதல் ஆட்சியர் வரை பல முறை மனுக்கள் அளித்தும் இதுவரை தங்களுக்கு எந்த ஒரு விடிவும் கிடைக்கவில்லை என கூறி அதிகாரியிடம் கூறிய போது,
அதிகாரி உரிய விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்த போது, மனு அளிக்க வந்த பொதுமக்கள் பல்வேறு கேள்விகளால் அதிகாரி முன்வைத்து பேசியதும் அலுவலர்கள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கிராம மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளை முன்வைத்தும் ஒரே பதிலை மீண்டும் மீண்டும் திருப்பி நாளை இதற்கான விசாரணை நடக்கும் என அந்த ஓற்றை வார்த்தையை மீண்டும் மீண்டும் தெரிவித்தார்.