Close
டிசம்பர் 12, 2024 6:27 மணி

டூ வீலரில் மறைந்திருந்த பாம்பு கடித்து டீ கடை உரிமையாளர் உயிரிழப்பு..!

பாம்புக்கடி -கோப்பு படம்

சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் மறைந்திருந்த பாம்பு கடித்து தேனீர் கடை உரிமையாளர் உயிரிழந்தார்.

சிவகாசியில் தேனீர் கடை நடத்தி வந்தவர் வெங்கடேசன். இவர், இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு புறப்பட்ட போது இருசக்கர வாகனத்தில் மறைந்திருந்த பாம்பு கடித்தது.

வாகனத்தின் முன்பகுதியில் பதுங்கியிருந்த கட்டுவிரியன் பாம்பு, வெங்கடேசனை கையில் கடித்ததாக கூறப்படுகிறது. அருகே இருந்தவர்கள் பாம்பை அடித்துக் கொன்று வெங்கடேசனை திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top