Close
டிசம்பர் 12, 2024 2:27 மணி

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் செவிலிமேடு பாலாற்றில் மேம்பாலம் கட்ட பொறியாளர்கள் ஆய்வு..!

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் செவிலிமேடு அருகே பாலாற்றில் மேம்பாலம் கட்ட பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் செவிலிமேடு அருகே ரூபாய் 100 கோடியில் புதிய பாலாற்று மேம்பாலம் கட்டும் பணி குறித்து , மாநில நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

கோயில் நகரம், பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்திற்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு மாநில , மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் குறிப்பாக காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை என்பது மிக முக்கியமான சாலையாகவும் அதிக அளவில் வாகன போக்குவரத்து உள்ள சாலையாகவும் உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு அருகே பாலாற்றின் குறுக்கே இருபது ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் நலனுக்காக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது.

இப்பாலம் அமைக்கப்பட்டாலும் விபத்து, திருமணநாள் உள்ளிட்ட நாட்களில் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் காணப்படுவதாகவும் இதனால் பொது போக்குவரத்து காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் மாநில நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில் அப்பகுதியில் மற்றும் ஒரு உயர்மட்ட பாலம் கட்டி போக்குவரத்து நெரிசல் குறைக்க திட்டமிட்டப்பட்டது.

இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார் ஆலோசனையின் பேரில், கோட்ட பொறியாளர் முரளிதரன் தலைமையில் திட்ட மதிப்பீடு மற்றும் அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு மாநில நெடுஞ்சாலை துறை ஒப்புதல் பெற அனுப்பப்பட்டது.

இந்த திட்ட மதிப்பீடு தற்போது பொதுமக்கள் நலன் கருதி ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இதற்கான பணிகள் துவக்கம் மற்றும் பணிகள் மேற்கொள்ளும் நிலைகள் குறித்து இன்று காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் மாநில நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட பட்டது.

இந்த ஆய்வின்போது கோட்ட பொறியாளர் முரளிதரன், உதவி கோட்ட பொறியாளர் இளங்கோ , உதவி பொறியாளர் விஜய் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

திட்ட வரைபடம் கொண்டு திட்டங்கள் குறித்து கோட்ட பொறியாளர் முரளிதரன் கண்காணிப்பு பொறியாளருக்கு விளக்கங்கள் அளித்து சுமார் 30 நிமிடம் ஆய்வில் ஈடுபட்டனர்.

மேலும் புதிய மேம்பாலம் அமையும் நிலையில், இருவழி பாதையாக மாறுவதால் நெரிசல் முற்றிலும் குறையும் என்பதால் இத்திட்டம் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளித்ததுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top