Close
டிசம்பர் 12, 2024 11:39 காலை

அலங்காநல்லூர், பிள்ளையார் நத்தம் கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி..!

மதுரையில் நடந்த கபாடி போட்டியில் விளையாடிய அணிகள்

அலங்காநல்லூர் :

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிள்ளையார் நத்தம் கிராமத்தில் ஆப்பிள் ஜல்லிக்கட்டு காளை நினைவாக மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபடி அணிகள் கலந்து கொண்டன. இந்த நிகழ்ச்சியி 64 அணிகள் 32 பிரிவுகளாக விளையாடியதில் முதல் பரிசு ரூபாய் 10,000 மற்றும் பரிசு கோப்பை அலங்காநல்லூர் அணி பெற்றது.

இரண்டாவது பரிசை அய்யம்பாளையம் கபடி அணி பெற்றது தொடர்ந்து மூன்று நான்கு மற்றும் இடத்திற்கான பரிசுகளை அம்பலத்தடி அய்யூர் கிராமங்களைச் சேர்ந்த கபடி அணி பெற்றுச் சென்றது.

இந்த போட்டியினை வயலூர் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி, மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், திமுக மாவட்ட கவுன்சிலர் சித்ராதேவிமுருகன், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ஓ.எம்.ஆர். திருமலைசீனிவாசன், தலைமையிலும் ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி செல்லமுத்து, தொழிலதிபர் வேட்டைப்புலி, யாதவ சேனைத்தலைவர் காசி பிரகாஷ், ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

கிராம மரியாதைக்காரர்கள் கருணாகரன், ரவிக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், ஜெயராமன், சண்முகம், மற்றும் கபடி வீரர்கள் போட்டி நடுவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் அங்குள்ள மந்தை அம்மன் கோவிலில் பரிசு கோப்பைகள் வைத்து வழிபாடு செய்து போட்டியினை தொடங்கி வைத்தனர்.

ஒச்சாங்கிகோனார் மற்றும் கருத்தாங்கி கோனார் வகையரா சார்பாக சதீஷ்கண்ணன், மதனகோபால் கார்த்திகேயன் ஹரிஷ்மகாராஜா, உள்ளிட்ட கமிட்டியினர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சமயநல்லூர் போலீசார் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top