1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமான திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் மழையிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த திருக்கோயில் திருமாகரலீஸ்வரர் திருக்கோயில் ஆகும்.
திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலமாகவும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் பரிகார தலமாகவும் இத்தலம் விளங்கி வருகிறது.
திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நடந்த 3 தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் தொடங்கி நான்கு கால பூஜைகள் விமர்சையாக நடைபெற்றது.
இன்று காலை நான்கு மணி அளவில் நான்காம் காலை பூஜைகள் நிறைவுற்றின் கலச புறப்பாடுகள் திருக்கோயில் வளாகத்தை சுற்றி வந்து ராஜகோபுரம் மூலவர் விநாயகர் பாலசுப்பிரமணியர் உள்ளிட்ட அனைத்து பரிகார தெய்வங்களுக்கும் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நாளை முதலில் அதி கன மழை பெய்த நிலையில் கும்பாபிஷேக நிகழ்வின்போது சிறிது நேரம் மழை ஓய்வெடுத்த நிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் இறையருள் பெற்றனர்.