Close
டிசம்பர் 12, 2024 10:29 காலை

அடுத்த ஆண்டுமுதல் பி. எஃப் கணக்கில் இருந்து பணத்தை ஏடிஎம்-ல் எடுத்துக்கொள்ளலாம்..!

வருங்கால வைப்புநிதி முன்பணத்தை ஏடிஎம் மூலம் பெறும் வசதி.-கோப்பு படம்

பி. எஃப் என்று அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து ஏடிஎம் மூலமாக பணம் எடுக்கும் வசதியை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை செயலர் சுமிதா கூறும்போது, ‘பி.எஃப். கணக்கில் இருந்து முன்பணம் கோருவோருக்கு அதை விரைவாக வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறினார்.

அந்த ஏற்பாடுகளின்படி ஏடிஎம் மூலமாக பி.எஃப். கணக்கில் இருந்து பணம் எடுக்கும் நடைமுறைக்கான பணிகள் நடந்து வருகிறது. வரும் ஜனவரி மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெற்று அந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி சுமார் 7 கோடி பி.எஃப் கணக்குகள் இருப்பதாக தொழிலாளர் நலத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top