Close
டிசம்பர் 12, 2024 10:27 காலை

தென்காசியில் அதிகாலை முதலே தொடர் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

தொடர் மழை பெய்தாலும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்

தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ,மாணவியர் பள்ளிக்கு செல்லும்போது கடும் அவதிக்கு உள்ளாயினர்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர், பண்பொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலிலேயே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ,மாணவியர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். பல மாணவ மாணவியர்கள் இருசக்கர வாகனங்களிலும் ஆட்டோக்களிலும் பள்ளிக்குச் சென்றனர். அரையாண்டு தேர்வு தொடங்கியுள்ளதால் விடுமுறை எடுக்கமுடியாத நிலையில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் கட்டாய நிலை ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top