Close
டிசம்பர் 12, 2024 10:20 காலை

சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூரில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா கோலாகலம்..!

சோழவந்தான் ஹஜரத் செய்யது ஷாஹீல் ஹமீது காதிரொலி பாதுஷா சந்தனக்கூடு திருவிழா

சோழவந்தான்:

சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள ஹஜரத் செய்யது ஷாஹீல் ஹமீது காதிரொலி பாதுஷாவின் சந்தனகூடு உருஸ் நடந்தது.

டிரஸ்டிசித்திக் இப்ராகிம், தர்கா கமிட்டினர் எத்தி ஹரஷா சாஹிப் சர்குரு என்ற இம்தியாஸ், அபுதாஹீர், ஜாஹீர் உசேன், ஜிலான் பாஷா ஆகியோர் முன்னிலையில் சந்தனகூடு உருஸ்விழா விடிய விடிய நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு 2ஆம் தேதி கந்தூரி கொடியேற்ற விழா நடந்தது. அன்று முதல் விழா நடந்து வந்தது. இன்று விழா நிறைவு நடைபெறுகிறது. சந்தன கூடு உருஸ் புறப்பட்டு காட்டுப்பள்ளிவாசல் சென்று பின்னர் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது.

கிராம பொதுமக்கள் அனைவருக்கும் சந்தனம் வழங்கப்பட்டது. சோழவந்தான் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். திருவாலவாயநல்லூர் ஊராட்சி சுகாதாரப் பணியை செய்திருந்தனர். மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தனக்கூடு உருஸ்விழாவில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top