Close
டிசம்பர் 12, 2024 1:47 மணி

சோழவந்தானில் சேரும் சகதியுமான சாலை: பொதுமக்கள் கடும் அவதி..!

சேரும் சகதியுமாக காட்சிதரும் சாலை

சோழவந்தான் :

சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு பசும்பொன் நகரில் முல்லையாற்று கால்வாய் பகுதியில் மழை காரணமாக பொதுமக்கள் நடமாட முடியாத அளவில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வார்டானது அதிமுகவின் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் வார்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரின் வார்டில் இப்படி சாலி இருப்பதையு பலரின் பேசுபொருளாக மாறியுள்ளது.

பொதுமக்கள் நடமாட முடியாத அளவில் சேரும் சகதியுமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் :

எதிர்க்கட்சியினர் வார்டு என்பதால் பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தர மறுக்கிறதோ என்று நினைக்கத்தோன்றுகிறது. குறிப்பாக மழைக் காலங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி தெருவெங்கும் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் இது குறித்து வார்டு கவுன்சிலர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு சேரும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top