மதுரை :
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், மேலூர், ஒத்தக்கடை, திருவாதவூர், கல்லுப்பட்டி, பேரையூர், செக்கானூரணி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து, பலத்து மழை பெய்வதால், பல ஊர்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி, போக்குவரத்துக்கும், பொது மக்களும் இடையூறு ஏற்பட்டன. மதுரை நகரை பொறுத்தவரையில் மதுரை அண்ணா நகர், வண்டியூர், தாசில்தார் நகர், யாகப்பா நகர், கருப்பாயூரணி உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால், இருசக்கர வாகனத்தில் மற்றும் சைக்கிளில் செல்வோர் மிகவும் அவதி அடைந்தனர். மேலும், பலத்த மழையால் பல இடங்களில் மழை நீர் குளம் போல தேங்கியது. இருந்தபோதிலும், மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. சோழவந்தான், மதுரை, வாடிப்பட்டி பகுதிகளில், மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்கு பள்ளிக்குச் சென்றது, பெற்றோர்களை சங்கடப்பட வைத்தது.