Close
டிசம்பர் 12, 2024 4:51 மணி

கடலூரில் வியாபாரி கழுத்தறுத்துக் கொலை

கடலூர் திருப்பாப்புலியூர் சரவண நகர் பைபாஸ் ரோட்டில் தண்டபாணி நகர் அருகில் ஸ்ரீ குமரன் பிரதர்ஸ் ஹார்டு வேர்ஸ் கடையை ராஜேந்திர குமார் என்பவர் நடத்தி வந்தார்.

இந்நிலையில் அவரது கடையில் நேற்று  வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடைக்கு வந்து கத்தியால் கழுத்தை அறுத்து வெட்டி உள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அவர்  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இகுறித்து தகவலறிந்த கடலூர் திருப்பாப்புலியூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக திருப்பாப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூன்று தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப் பகலில் கடை உரிமையாளரை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top