மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணவனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000/-அபராதமும் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு காயத்ரி என்பவரை கொலை செய்த வழக்கில் கணவன் பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்(31) என்பவரை ஒட்டன்சத்திரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப்., அறிவுறுத்தலின்படி ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ், நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் பெருமாள், அரசு வழக்கறிஞர் சிவக்குமார் இணைந்து வழக்கினை சிறப்பாக நடத்தினர்.
விசாரணை நடத்திய பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி குற்றவாளி கார்த்திகேயனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, ரூ.1000ம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.