விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் இந்த செய்தி வெளியிடப்படுகிறது. சம்மந்தப்பட்டவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன.
வெள்ளக்கோவிலில் 3 நாள் பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது புரையேறியதால் உயிரிழந்தது.
வெள்ளக்கோவிலைச் சோ்ந்த 23 வயது பெண். இவா் தாராபுரம் மத்திய அரசு பணியில் உள்ளார். இவரது கணவா் தாராபுரத்தைச் சோ்ந்தவர். அங்குள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் மேலாளராக உள்ளார்.
நிறைமாத கா்ப்பிணியாக இருந்த பெண்ணுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அடுத்த நாள் சனிக்கிழமை தாயும், குழந்தையும் மருத்துவமனையிலிருந்து அழைத்து வரப்பட்டு வெள்ளக்கோவிலில் உள்ள பெண்ணின் பெற்றோர் வீட்டில் இருந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாய் தன் குழந்தைக்கு பால் கொடுத்த போது குழந்தைக்கு புரையேறியுள்ளது. அவர் குழந்தையை தூங்க வைத்து விட்டு, சிறிது நேரம் கழித்துப் பார்த்த போது குழந்தை இறந்து போனது தெரியவந்தது.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனா். தாய்ப்பால் கொடுத்த போது புரையேறியதால் குழந்தை இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.