சோழவந்தான்:
சோழவந்தான் அருகே காடுபட்டியில் சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் சீர் மரபினர் அதிகம் வசிக்கக் கூடிய நிலையில் பல்வேறு இடங்களில் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சோழவந்தான் அருகே காடுபட்டியில் சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சீர் மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து காடு பட்டியில் நடைபெற்ற முகாமில் சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் பெரியசாமி தலைமை வகித்தார். காடுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் திமுக நிர்வாகி செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை அடுத்து பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய அலுவலர் ஜெய்கணேஷ் மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சீர் மரபினர் நல சங்க நிர்வாகிகள் மேலக்கால் தவமணி காடுபட்டி ராசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்