Close
ஏப்ரல் 7, 2025 6:35 காலை

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் -கோப்பு படம்

மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நகராட்சி உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்து இருந்தது.

இந்தக் குழு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இன்று மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top