Close
ஏப்ரல் 19, 2025 11:36 காலை

காற்று இல்லாத விண்வெளி.. சூரியன் மட்டும் எப்படி எரிகிறது?

நெருப்பு எரிவதற்கு காற்று முக்கியம் என்பது நமக்குத் தெரியும்.

அதாவது ஒரு பொருள் எறிய அதற்கு ஆக்சிஜன் எரிபொருள் மற்றும் வெப்பம் ஆகிய மூன்றும் அடிப்படையான ஒன்று. ஆனால், காற்றே இல்லாத விண்வெளியில், சூரியன் எப்படி எரிகிறது என நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

பூமியில் நாம் காணும் எரிதல் ஒரு கெமிக்கல் ரியாக்ஷன். இதில் எரிபொருள் ஆக்சிஜனுடன் இணைந்து வெப்பம் ஒளி மற்றும் பிற பொருட்களை உருவாக்குகிறது. ஆனால், சூரியனில் நிகழும் எரிதல் முற்றிலும் வித்தியாசமானது. எனவே, இந்த இரண்டு எரிதலையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

சூரியன், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாய்களால் ஆன ஒரு பிரம்மாண்டமான கேஸ் சேம்பர் போன்றது. அதன் மையப் பகுதியில் மிக அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் இருப்பதால், ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஹீலியம் அணுக்களாக உருவாகின்றன.

இந்த செயல்முறையை தான் அணு இணைவு என்கிறோம். இது நிகழும்போது மிகப்பெரிய அளவில் ஆற்றல் வெளியேறுவதால் சூரியன் பிரகாசமாக ஜொலிக்கிறது. சூரியன் தொடர்ச்சியாக எரிவதால் தான் நாம் இங்கு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதன் வெப்பம் பூமியை சூடாக்குவதால் இங்கு உயிர்கள் வாழ முடிகிறது.

சூரிய ஒளி தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க உதவுகிறது. மேலும் சூரியக்காற்று பூமியின் காந்த புலத்துடன் வினைபுரிந்து அழகிய காட்சிகளான Northern Lights போன்ற அழகான நிகழ்வுகளை உருவாக்குகிறது.

சூரியனின் எரிபொருள் ஹைட்ரஜன். எதிர்காலத்தில் அதில் உள்ள ஹைட்ரஜன் முழுவதும் ஹீலியமாக மாறி விட்டால் அதன் எரிதல் நிகழ்வு நின்று விடும். விஞ்ஞானிகளின் கணக்கிட்டீன்படி சூரியன் இன்னும் சுமார் 5 பில்லியன் ஆண்டுகள் வரை தனது பிரகாசத்தை வெளிப்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

தகவல் உதவி: ஆரூர்.அரவிந்தன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top