Close
டிசம்பர் 14, 2024 1:50 மணி

மதுரையில் தொடர் மழை : பழுதான சாலைகள்..!

மழைநீர் தேங்கிய சாலை

மதுரை:

மதுரை மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல இடங்களில் சாலைகள் மோசமாகி பள்ளமும் மேடுமாக மாறியுள்ளது. அதனால் மழைநீர் சாலையில் தேங்கி மிக மோசமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுரை மாவட்டத்தில், சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர், மேலூர் ,அழகர் கோவில், கருப்பாயூரணி, திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர், செக்கானூரணி உசிலம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

பலத்த மழையால், மதுரை நகரில் அண்ணா நகர் தாசில்தார் நகர் யாகப்ப நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையில் பள்ளமாக இருப்பதால் , போக்குவரத்துக்கும் பொது மரத்திற்கும் இடையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாநகராட்சி மோசமான சேலைகளை சீரமைத்து
சாலை போக்குவரத்து வழி வகை செய்ய வேண்டும் என, இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மதுரை அண்ணாநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி பயணிகளை ஏற்றுவதை போலீசார் எச்சரித்தும், ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டு கொள்ளவில்லையாம். ஆகவே, பஸ் நிறுத்தத்தில் நிறுத்தும் ஆட்டோக்கள் மீதும் போலீஸார் நடவடிக்கை தேவை என, பொதுமக்கள் புலம்புகின்றனர். ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என எச்சரித்து வருகின்றனர். அபே ஆட்டோக்கள் பலர் விதிகளை மீறுவதும் தெரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top