Close
ஏப்ரல் 4, 2025 12:13 காலை

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை..!

கோப்பு படம்

குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு யானை உயிரிழப்பு.

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் மழையால் காட்டாற்று வெள்ளப்பெருக்கு நீடிக்கும் நிலையில் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குற்றாலம் மெயின் அருவிக்கு மேற்பகுதியில் இருந்து இழுத்துவரப்பட்ட மூன்றுவயது மதிக்கத்தக்க ஆண் யானை அருவி பாறையில் இருந்து விழுந்து பலியாகி உள்ளது.

தற்போது வனத்துறையினர் விரைந்து யானையின் உடலை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையால் குற்றால மலைப்பகுதியில் இருந்து யானை இழுத்துவரப்பட்டு பலியான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top