Close
டிசம்பர் 15, 2024 9:36 காலை

தொகுப்பு வீட்டின் பணிகள் பாதியிலேயே நிறுத்தம்.. கூலித் தொழிலாளி அவதி!

திருவள்ளூர் அருகே சில வருடங்களுக்கு முன்பு அரசு கொடுத்த தொகுப்பு வீட்டின் பணிகள் பாதியிலேயே நிறுத்தி உரிய நிதி வழங்காததால் தங்குவதற்கு வீடின்றி கூலி தொழிலாளி அவதி வீடு கட்டித்தர கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி திருவள்ளூர் ஒன்றியம் தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் புதிய காலனி பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி இயேசு மனைவி சுலோச்சனா இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அன்றாடம் கிடைக்கின்ற கூலி வேலை பார்த்து பிழப்பு நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில்.அரசு தரப்பில் வழங்கப்படும் தொகுப்பு வீடு ஒன்று கட்டிக்கொள்ள ஆணை வழங்கப்பட்டதை அடுத்து இவர்கள் வசித்து வந்த குடிசை வீடு அகற்றிவிட்டு தொகுப்பு வீட்டின் பணிகள் தொடங்கப்பட்டு 75% சதவீதம் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் தவணை முறையில் வழங்கும் நிதி வழங்காததால் பணிகளை மேற்கொள்ள முடியாததால் பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்த வீட்டினர் பலமுறை தாங்கள் வீட்டிற்கு கொடுக்க வேண்டிய கவன நிதியை பெற்றுத் தருமாறு ஊராட்சி நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும்,மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து இயேசுவின் மனைவி சுலோச்சனா தெரிவிக்கையில் தங்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறி இருந்த வீட்டையும் இடித்துவிட்டு தொகுப்பு வீடு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்ப கட்டத்தில் ஒரு கவன நீதி மட்டுமே வழங்கப்பட்டதாகவும், மீதம் செய்த பணிகளுக்கு தவண நிதி வழங்கப்படாததால் தாங்களால் வீட்டின் பணியை தொடர முடியாமல் 10 ஆண்டுகள் ஆகியும் பணிகளை மேற்கொள்ள முடியாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

தற்போது வீடு இல்லாமல் அருகில் ஓலை கொட்டகை அமைத்து வசித்து வருவதாகவும், அந்த ஓலை குடிசை வீடும் பழுதடைந்து கொட்டகை மீது பிளாஸ்டிக் பரிதாக்கலை போற்றியும் அதுவும் கிழிஞ்சி சரி செய்ய முடியாமல் அந்த குடிசை வீட்டிலேயே வேறு வழியின்றி வசித்து வருவதாகவும், சமீபத்தில் பெய்த மழையால் தாங்கள் இருக்கின்ற குடிசை சாய்ந்து சாய்ந்து குடிசைக்குள் மழை நீர் புகுந்து விட்டதால் உறங்குவதற்கு இடமில்லாமல் தங்களின் குழந்தைகளை வைத்துக்கொண்டு வேறு வழியின்றி தண்ணீரிலே இருந்து வந்ததாகவும், இது மட்டுமல்லாமல் தாங்கள் வசிக்கின்ற குடிசையில் பலமுறை விஷ பாம்பு,பூச்சிகள் வருவதால் மிகவும் பரிதவித்து வருவதாக, எனவே தாங்களுக்கு கொடுத்த வீட்டினை பணியை மேற்கொள்ள தாங்களுக்கு உதைவிட சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top