Close
டிசம்பர் 15, 2024 5:53 மணி

வரும் 18ம் தேதி முதல் ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் அறிமுகம் : பால் உற்பத்தியாளர்கள் வரவேற்பு..!

ஆவின் கிறீன் மேஜிக்

நாமக்கல் :

தமிழகத்தில், வரும் 18ம் தேதி முதல், ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் அறிமுகம் செய்யும் நடவடிக்கைக்கு, பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொதுச் செயலாளர் நாமக்கல் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் உள்ள, பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள், பால் நுகர்வோர், மற்றும் ஆவின் பால் ஏஜெண்டுகள் நலன் கருதி, ஆவின் நிறுவனம் கிரீன் மேஜிக் பிளல் என்ற புதிய வகை பாலை அறிமுகம் செய்துள்ளது. இந்த வகை பால் வருகிற 18ங்தேதி முதல் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு வர உள்ளது.

இந்த பாலில் 4.5 சதவீதம் கொழுப்புச்சத்து மற்றும் 9 சதவீதம் கொழுப்பில்லாத இதர சத்து, மேலும், விட்டமின் ஏ மற்றும் டி சத்துடன் செறிவூட்டப்பட்ட புதிய வகை பாலாக இது அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆவின் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பால் உற்பத்தியாளர்கள் சார்பில் வரவேற்பு தெரிவிக்கிறோம்.

ஆவின் மூலம் செறிவூட்டப்பட்ட புதிய வகை பாலை விற்பனைக்கு அறிமும் செய்ய உள்ள, தமிழக முதலமைச்சர், பால்வளத்துறை அமைச்சர், அரசு செயலாளர் மற்றும் பால்வளத் துறை நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த புதிய வகை பால் அறிமுகத்தின் மூலம் பால் நுகர்வோர்களுக்கு தரமான பால் கிடைப்பதோடு, ஆவினுக்கு பால் வழங்கும், பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் பணப் பயன் கிடைக்க வழி வகுக்கப்படும். தமிழத்தில் உள்ள ஒருசில அரசியல் கட்சிகள் ஆவின் பாலை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.

பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மை பயக்கும் இந்த நடவடிக்கையை எதிர்த்து, எந்த எதிர்க் கட்சிகளும் அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top