Close
டிசம்பர் 15, 2024 4:52 மணி

அம்பேத்கர் மாலைநேர படிப்பக கட்டிடம் கட்ட அனுமதி மறுப்பு : விசிக உண்ணாவிரதம்..!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விடுதலை சிறுத்தை கட்சியினர்.

அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் அம்பேத்கர் மாலை நேர படிப்பக கட்டிடத்தை கட்ட அனுமதி மறுக்கும் வருவாய்த்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன உண்ணாவிரத போராட்டம்.

சோழவந்தான் :

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பம் 25 வருடங்களாக உள்ள நிலையில் தற்போது அதன் அருகில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு டாக்டர் அம்பேத்கர் மாலை நேர படிப்பகம் என்ற பெயரில் அலுவலக கட்டடத்தை கட்ட தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிச்சம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கொடியேற்றிய விவகாரத்தில் வருவாய் துறையினர் மூன்று பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு பின்பு வருவாய்த் துறையின் தொடர் போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணி வழங்கிய நிலையில்,

வருவாய் துறையினர் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கட்டி வரும் டாக்டர் அம்பேத்கர் மாலை நேர படிப்புக கட்டிடத்திற்கு அனுமதி உள்ளதா அனுமதி பெற்ற இடமா இதை கட்ட அரசு அனுமதி உள்ளதா என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மூன்று 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, நோட்டீசை பெற்றுக்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ,வருவாய்த்துறையினர் நோட்டீசை திரும்ப பெறவேண்டும் அல்லது அம்பேத்கர் மாலை நேர படிப்பகம் கட்ட அனுமதி தர வேண்டும் என்று கூறி, தற்போது ஆதனூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து, விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சிந்தனை வளவன் கூறுகையில், அம்பேத்கர் மாலை நேர படிப்பக கட்டிடத்திற்கு அனுமதி மறுக்கும் வருவாய்த்துறையினரை வன்மையாக கண்டிக்கிறோம். கட்டிட அனுமதி விஷயமாக நோட்டீஸ் அனுப்பிய வட்டாட்சியர் நோட்டீசை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

கட்டிடம் கட்ட தொடர்ந்து எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் இல்லையென்றால், நாளை முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அலங்காநல்லூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம், மற்றும் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இதை தமிழக அரசிற்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக எங்களுக்கு அம்பேத்கர் மாலை நேர கட்டிடம் கட்ட அனுமதி மறுக்கும் பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top