வாட்ஸ்ஆப்களில் பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கிகள் அனுப்பியது போல் அந்த வங்கிகளின் லோகோவுடன் மெசேஜ் அனுப்பி மோசடி நடப்பது அதிகரித்து வருகிறது.
இந்த மெசேஜ்கள் வங்கிகள் அனுப்பியது போன்றே, லோகோவுடன் மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஆதார் கார்டு லிங்க் செய்ய ஒரு லிங்க் அனுப்புகின்றனர். அதனை தொட்டால் லிங்க் டவுன்லோடு ஆகி உங்களது மொபைலில் உள்ள அனைத்து தகவல்களையும் முழுமையாக ஹேக் செய்து விடும்.
இந்த மெசேஜ்கள் ஏதாவது ஒரு குரூப்பில் வந்து விட்டால், அந்த குரூப் ஐகானும், தலைப்புமே மாறி விடுகிறது. இதனை அந்த குரூப்பில் உள்ளவர்களில் யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்கள், உடனடியாக தனது மொபைலில் உள்ள நெட் இணைப்பினை ஆப் செய்ய வேண்டும்.
பின்னர் அந்த மெசேஜை அழித்து விடுங்கள். பின்னர் மொபைலின் முகப்பு பக்கத்திற்கு வந்து பேக்கப் மெசேஜ்கள் அனைத்தையும் அழித்து விட வேண்டும். இந்த செயல்கள் எல்லாம் நெட் இணைப்பு இல்லாமல் செய்யக்கூடியவை தான். இதனை உடனடியாக செய்து விடுங்கள்.
பின்னர் குரூப் அட்மினுக்கு தகவல் சொல்ல வேண்டும். குரூப் அட்மின் உடனடியாக அந்த மெசேஜை டெலிட் ஆல் கொடுத்து விட்டு, அட்மின் மட்டும் செய்திகளை அனுப்பும் வகையில் அந்த குரூப்பினை உடனே மாற்ற வேண்டும். இப்படி மாற்றி விட்டால் அந்த குரூப்பில் உள்ள மற்ற உறுப்பினர்களின் மொபைல்கள் ஹேக் செய்வதை தடுத்து விட முடியும்.
இரண்டு மாதத்திற்கு முன்னால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா லிங்க் மட்டுமே வந்த நிலையில் தற்போது கனரா வங்கி லிங்க்கும் வர ஆரம்பித்து விட்டன. இந்த ஹேக்கர்கள் யார் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை.
இவர்களை தேடி அலையவும் முடியாது. நாம் கவனமாக இருக்க வேண்டும். லிங்க்கினை தொடாமல் இருப்பது, பின்னர் செய்தியில் மேலே கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகள் உங்கள் பணத்தை பாதுகாக்க உதவும்.