Close
டிசம்பர் 19, 2024 12:15 மணி

தொழிலாளர் இடையே ஒற்றுமை இல்லை : தற்கொலைக்கு முயன்ற சாம்சங் தொழிலாளி..!

பணியாளர்களுக்கும் ஒற்றுமை இல்லாததால் தற்கொலை செய்துகொள்ள முயன்ற தொழிலாளர் சுதாகர்

தொழிலாளர்கள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக samsung தொழிலாளி தற்கொலை முயற்சி மேற்கொண்டு தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வருகிறது சாம்சங் இந்தியா நிறுவனம். எங்க வீட்டு உபயோகப் பொருட்கள் என டிவி வாஷிங் மெஷின் ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இத் தொழிற்சாலையில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தொழிற்சங்கம் துவங்க அனுமதி கோரிய நிலையில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் நடைபெற்று போராட்டம் வாபஸ் பெற்று மீண்டும் பணிக்கு திரும்பினர்.

போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கும், போராட்டம் நடத்தும் நாட்களில் பணிபுரிந்த ஊழியர்களுக்கும் இடையே தற்போது கருத்து வேற்றுமைகள் நிலவி வரும் நிலையில் நேற்று போளுரை சேர்ந்த சுதாகர் என்பவர் ஆப்பரேட்டர் குளிர்சாதனப்பெட்டி தயாரிக்கும் பிரிவில் பணியில் இருந்த போது மற்றொரு ஊழியர் அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நேற்று மாலை அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலை முயற்சிக்கு மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவரை மீட்ட சக தொழிலாளர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளித்து அதன் பின் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் உள்ளார்.

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களின் இரு பிரிவினை ரெடி தற்போது கருத்து வேற்றுமை நிலையோறும் நிலையில் இதனை உடனடியாக நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்பது வேண்டுகோளாக உள்ளது.

இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில் போராட்டம் நடத்தியதால் தங்களை நிர்வாகம் உதாசீனப்படுத்தி வருவதாகவும் பல்வேறு நிலையில் அவமானப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top