Close
டிசம்பர் 18, 2024 8:57 மணி

சாலையோர முதியோருக்கு உணவு வழங்கிய எழுத்தாளருக்கு சேவை பாரதி விருது..!

உணவளிக்கும் எழுத்தாளர் பழனிவேல்

பெஞ்சல் புயல் காலங்களில் சாலையோர முதியவர்களுக்கு உணவு வழங்கி சேவை புரிந்த மருந்தாளுனரும், எழுத்தாளருமான வே.பழனிவேலனுக்கு சேவை பாரதி விருது வழங்கி கௌரவித்த தமிழ் அமுது அமைப்பினர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று ஆனந்தமாய் சுதந்திரத்தை பாடிய புதுக்கவிதையின் முன்னோடி பாட்டுக்கோர் அதிபதியாய் விளங்கிய மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தமிழ் ஆர்வலர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அவ்வகையில் அரியலூர் மாவட்டம், இளையம்பெருமாள் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ் அமுது அறக்கட்டளை அமைப்பினர் பல்வேறு பிரிவுகளில் சேவை புரிந்த ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு பகுதிகளை பெஞ்சல் புயல் காலங்களில் சாலையோரம் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு மூன்று வேளையும் உணவு அளித்து சமூக சேவை புரிந்த பாரம்பரிய மருத்துவம் மற்றும் அரசு மருந்தாளரும், எழுத்தாளருமான செங்கை
வே.பழனி வேலன் அவர்களுக்கு சேவை பாரதி 2024 காண விருது தமிழ் அமுது அமைப்பினால் வழங்கப்பட்டது.

இதேபோல் பல்வேறு துறைகளில் சிறப்பாக பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் செயல்பட்ட 21 பேர்களுக்கும் சேவை பாரதி என்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் அமுது அறக்கட்டளை தொடர்ந்து பாரதியார் பிறந்தநாளை கொண்டாடுவதும் பாரதியார் குறிப்பு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைத்து அவர்களை ஊக்குவிப்பதும் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top