காஞ்சிபுரத்தில் தமிழக துணை முதல்வர் பிறந்த நாளை ஒட்டி மாநகர இளைஞரணி சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமினை எம்எல்ஏ சுந்தர் துவக்கி வைத்தார்.
தமிழக துணை முதல்வரும் , திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக் ஏற்பாட்டின் பேரில் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் பொதுமக்கள் துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமினை திமுக மாவட்ட செயலாளரும் , சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் துவக்கி வைத்தார்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரத்ததானம் செய்தனர் ரத்த தானம் செய்த அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகளை எம்எல்ஏ சுந்தர், மேயர் மகாலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் எஸ் கே பி சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பொது மருத்துவம் மற்றும் ரூபாய் 3000 மதிப்புள்ள எலும்பு திம்ம குறைவு கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது மட்டும் இல்லாது சிறப்பு மருத்துவர்கள் தினகரன், ஆதித்யா கௌஷிக், சோனியா மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் எலும்பு மற்றும் பொது மருத்துவம் குறித்து பரிசோதனைகள் மேற்கொண்டு மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் காஞ்சிபுரம் மண்டல பாஜக இளைஞரணி செயலாளர் திவ்ய பிரசாத் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் எம் எல் ஏ சுந்தர் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பகுதி கழக செயலாளர் தசரதன், சந்துரு, திலகர், மாமன்ற உறுப்பினர்கள் , திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.